காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா: சிலம்பாட்ட கலை குழுவினரின் கலை நிகழ்ச்சி

காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில் காஞ்சிபுரம் மாவட்ட கை சிலம்பாட்ட கலை குழுவினரின் கலை நிகழ்ச்சி அனைவரின் வரவேற்பை பெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் அனுதினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஐந்தாம் நாள் காஞ்சிபுரம் மாவட்ட கை சிலம்பாட்ட கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி அனைவரின் வரவேற்பை பெற்றது. கலை நண்மணி வடிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 5க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு பெற்ற நடன நிகழ்ச்சி அனைவரும் கைத்தட்டலை பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


