காஞ்சிபுரம் மாவட்ட திமுக பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் பிறந்த நாளை ஒட்டி ஏழை எளியவருக்கு அன்னதானம்
காஞ்சிபுரம் மாவட்ட திமுக பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் பிறந்த நாளை ஒட்டி ஏழை எளியவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் அருகே அமைந்துள்ள வீடு இல்லாத முதியோர்கள் இல்லத்தில் முன்னாள் நகராட்சி தலைவரும் காஞ்சிபுரம் திமுக மாவட்ட பொருளாருமான சன் பிராண்ட் ஆறுமுகம் அவர்களின் பிறந்தநாள் விழாவில், ‘தானத்தில் சிறந்தது அன்னதானம்’ என்பதின் அடிப்படையில் முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் வட்டச் செயலாளரும் மாநகராட்சி வரி விதித்து மேல்முறையீட்டு குழு உறுப்பினருமான வ.கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் சசிகலா வட்டச் செயலாளர்கள் மார்க்கெட் தனுசு, சிவா, R.முரளி, கட்சி நிர்வாகிகள், செந்தில், நரசிம்மன், பெருமாள், பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


