காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்

காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்

கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு ஆலயங்களில் பல்வேறு விதிகளில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் டி.கே நம்பி தெருவில் அமைந்துள்ள குமரகோட்டம் முருகன் ஆலயம் பராமரிப்பில் இயங்கி வரும் டி.கே.நம்பி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இதில் ஆலய அறங்காவலர் குழு தலைவர் ராமு தலைமையில் சிறப்பு பூஜைகளும் சிறப்பு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

இதில் அறங்காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி நித்யா சுதாகர் மாவட்ட நெசவாளர் அணி மலர்மன்னன் மாநகர நெசவாளர் அனைத்து துணை அமைப்பாளர் சுதர்சன் முருகன் பட்டு கூட்டுறவு சங்க இயக்குனர் கனகவல்லி, பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சங்கர மடத்தில் சங்கர மடத்தில் மேலாளர் சுந்தரேச அய்யர் அரவிந்த் சுப்பிரமணி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அலுவலகம் எஸ்டேட்,  சமையலறை, புத்தகக் கடை,  ஸ்டோர் ரூம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் வைத்து சிறப்பு அர்ச்சனை சிறப்பு தீப தீபாராதனைகள் நடைபெற்றது.

இதே போல் காந்தி சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மாநகரம் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற 35 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.

இந்து முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏஏ சந்தோஷ் மோகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாவட்டத் தலைவர் சிவானந்தம், தேவதாஸ் வழக்கறிஞர் டி வி தசரத் ஜி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வணங்கி வழிபாடு செய்தனர்.

கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இதேபோல் கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகருக்கு புதிதாக வெள்ளி கவசம் அனுபவிக்கப்பட்டு சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்றது.

இதில் கவுன்சிலர் ஜோதிலட்சுமி சிவாஜி தலைமையில் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. மேலும் இவ்விழாவை ஒட்டி தேரடி பகுதியில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *