ராமநாதபுரத்தில் வேளாண் சந்தை நுண்ணறிவு & விவசாயிகள் ஆலோசனை மையக் கட்டட திறப்பு விழா
 
					ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண்மை – உழவர் நலத்துறை மூலம் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை காணொளிக்காட்சியின் மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் மூலம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வளாகத்தில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் விவசாயிகள் ஆலோசனை மையக் கட்டடம் கட்டப்பட்டுள்ளதை விவசாயிகள் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக்காட்சியின் மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து ராமநாதபுரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வளாகத்தில் உள்ள வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் விவசாயிகள் ஆலோசனை மைய கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்து வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலம் 25 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பாஸ்கரமணியன், ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயலர்கள் கோபாலகிருஷ்ணன், மல்லிகா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஆறுமுகம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அருண்குமார், தோட்டக்கலைத்துறை உதவி செயற்பொறியாளர் சிவகுமார், தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 
			 
			 
			 
			 
			