தங்கத்தேரில் எழுந்தருளிய திருத்தணி முருகப்பெருமான்: பக்தர்கள் சாமி தரிசனம்

ஆவணி மாத விசாக நட்சத்திரத்தையொட்டி திருத்தணி முருகன் கோயில் உற்சவர் முருகப் பெருமானின் தங்கத்தேர் பவனி நடைபெற்றது. சிவ பூத வாத்தியங்கள் முழங்க முருக பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
திருத்தணி முருகன் கோயிலில் ஆவணி மாத விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் எழுந்தருளினார்.
சாமிக்கு சிறப்பு தீபாராதனை தொடர்ந்து தேர் வீதியில் ஏராளமான பக்தர்கள் கூடியிருக்க ‘அரோகரா’ என்ற பக்தி பரவசத்துடன் தேர்பவனி நடைபெற்றது.
இதில் சிவபூத வாத்தியங்கள் குழுவினர் பங்கேற்று தேர்பவணியில் இசையை முருக பெருமானுக்கு சமர்ப்பணம் செய்தனர்.
தேர்பவனியின் போது ஏராளமான பக்தர்கள் கற்பூர தீபாராதனை செய்து பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
மண்டல வேளாளர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் எல்லப்ப முதலியார் தலைமையில் தங்கத்தேர் பவனி ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளாராக டாக்டர் சுசித்ரராஜ் கலந்து கொண்டு தங்கரதத்தை துவக்கி வைத்தார்.
இதில் மாநில துணைத்தலைவர் எழிலன், பொதுச் செயலாளர் கருணா, செயலாளர் பூபதி, ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, மகளிர் குழு தலைவர் ராணி சிவாஜி, துணைத் தலைவர் மல்லிகா கேசவன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.