தூத்துக்குடி மாவட்டத்திற்கு ராஜேந்திர பாலாஜி வரும்போது காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி காட்ட முடிவு
“தூத்துக்குடி மாவட்டத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரும்போது காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்துவோம்” மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் பேட்டி.

தமிழகத்தின் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காங்கிரஸ் கட்சி பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் ஆதரவாக செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இதை கண்டித்து தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள இந்திராகாந்தி திரு உருவ சிலைக்கு முன்பு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவுக்கு எதிராகவும், ராஜேந்திர பாலாஜி தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பீகார் மாநில தேர்தல் முடிவுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்று கூறும் ராஜேந்திர பாலாஜி கடந்த 1996ம் ஆண்டு அதிமுகவினரால் அம்மா என்று அன்போடு அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த போது காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவை கலைக்க வேண்டும் என்று கூறவில்லை.”
“வெற்றி தோல்வி என்பது ஜனநாயகத்தில் மாறி மாறி வரும் ஒரு நிலை என்பது ராஜேந்திர பாலாஜிக்கு தெரியாமல் போனது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது. ஒருவேளை அவருக்கு மனநிலை சரியில்லாமல் இருப்பார் போல் தோன்றுகிறது. மனநிலை சரியில்லை என்றால் அவர் நல்ல மனநல டாக்டரை பார்க்க வேண்டும் என்று நாங்கள் அவருக்காக பரிதாபப்படுகிறோம்.”

“காங்கிரஸ் கட்சி இந்திய வரலாற்றில் பாராளுமன்றத் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று வரலாற்று சாதனை படைத்த இயக்கம் என்பதை ராஜேந்திர பாலாஜி மறந்து விடக்கூடாது. ஏறத்தாழ 22 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்த இயக்கம். தொலைநோக்கு சிந்தனை, கொள்கை, மதசார்பின்மை ஆகியவற்றை கடைபிடித்து 140 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்கும் கட்சி. காங்கிரஸ் கட்சி என்றைக்கும் பயங்கரவாதத்துக்கோ, பயங்கரவாதிகளுக்கு துணை போவது கிடையாது. ஏனென்றால் பயங்கரவாதத்தால் இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி இரண்டு தலைவர்களை இழந்த கட்சி. ”

“அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்று சொல்லும் ராஜேந்திர பாலாஜிக்கு வரலாறு தெரியாமல் போனது அவரது அறியாமையை காட்டுகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு ராஜேந்திர பாலாஜி வரும்போது காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்துவோம்” என்று கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாமன்ற உறுப்பினர் எடின்டா, மண்டல தலைவர்கள் ராஜன், சேகர், செந்தூர்பாண்டி, ஐசன்சில்வா, ஊடகப்பிரிவு மாநில செயலாளர் முத்து மணி, ஊடக பிரிவு தெற்கு மாவட்ட தலைவர் ஆசிர் செல்வன், மீனவர் அணி மாநகர் மாவட்ட தலைவர் மிக்கேல் பர்ணாந்து, இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மரிய ஆல்வின், மகிளா காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவி பிரீத்தி வினேத், அமைப்பு சாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், எஸ்சி பிரிவு மாநகர மாவட்ட தலைவர் பிரபாகரன், மனித உரிமை துறை மாநகர் மாவட்ட தலைவர் ஜெயராஜ், மேற்கு மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவி கமலாதேவி, நகர மீனவர் அணி தலைவர் சிமியான், மாவட்டத் துணைத் தலைவர்கள் ரஞ்சிதம் ஜெபராஜ், நெப்போலியன், நவரோஜ், ரூபன் வேதசிங், அருணாச்சலம், அருள் வளன், முத்துராஜ், இருதயராஜ், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, அந்தோணி ஜெயராஜ், குமாரமுருகேசன், ஜூட்சன், சிவன் யாதவ், சசி, காமாட்சி தனபால், ஜான்சன், கதிர்வேல், ஐஎன்டி யூசி தலைவர் சுப்பிரமணி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வெங்கட் சுப்பிரமணியன், வார்டு தலைவர்கள் வேல்குமார், தாமஸ், சித்திரை பால்ராஜ், முத்துவேல், சுரேஷ், சுடலை, வெள்ளையன், மகாலிங்கம், ஜேம்ஸ், மாரியப்பன், வாசி ராஜன், ரத்தன், விஜயா, ஜெயமணி சுரேஷ், முருகேசன், ஜூடு, அலெக்ஸ், சுரேஷ், வில்சன், சரவணன், ஜோ பெர்னான்டோ, உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


