இந்திரா காந்தி நினைவு தினம்: தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை
 
					
இந்தியாவின் இரும்பு பெண்மணி முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ் MC, மண்டல தலைவர் ராஜன்,எஸ்.சி பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பிரபாகரன், மகிளா காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவி பிரீத்தி, சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் மைதீன், மாநகர் மாவட்ட சேவா தளம் தலைவர் கே. டி. எம். ராஜா, அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மீனவரணி மாநகர் மாவட்ட தலைவர் மிக்கேல், நகர மீனராணி தலைவர் சிமியோன், மாவட்ட துணைத் தலைவர் ரஞ்சிதம் ஜெபராஜ், மாவட்ட செயலாளர்கள் நாராயணசாமி, அந்தோணி ஜெயராஜ், ஜோசப் அரவிந்த், மரிய செல்வராஜ் ,இளைஞர் காங்கிரஸ் வடக்கு மண்டல தலைவி கமலா தேவி, மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரெனிஷ்பாபு, மற்றும் வார்டு தலைவர்கள் தனுஷ், அண்ணாமலை, சுப்பிரமணி, சரவணன், வில்சன் ,பெனடிக், முத்துராஜ், கிருஷ்ணன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 


 
			 
			 
			 
			 
			