வாகன ஓட்டிகள் இனி தப்பு முடியாது – மதுரையில் நவீன புதிய ரக கண்காணிப்பு கேமரா!
அதிவேகமாக ஓட்டும் வாகன ஓட்டிகள் இனி தப்பு முடியாது – நவீன புதிய ரக கண்காணிப்பு கேமராவை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எப்போதுமே பரபரப்பாக காணப்படக்கூடிய மதுரை திருப்பரங்குன்றம் சாலை பகுதியில் உள்ள மெஜிரா காலேஜ் முன்பாக, மதுரை மாநகர காவல் துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட automatic number plate retable camera-வை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்த சாலை வழியாக அதிவேகமாக செல்லக்கூடிய வாகனம் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களுடைய புகைப்படம் மற்றும் அந்த சாலையில் தலைக்கவசம் இல்லாமல் செல்லக்கூடிய வாகனம் என அனைத்தையுமே படம்பிடித்து உடனடியாக அவற்றுக்கான அபராதத்தை விதிக்கக்கூடிய வகையில் தொழில்நுட்பத்தோடு நவீன ரக கேமரா பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக செய்தியாளர்களிடம் மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் தெரிவித்தார்.
அந்த சாலை வழியாக கல்லூரி மாணவர்கள் மூன்று நபர்கள் ஒரே வாகனத்தில் செல்வது, தலைக்கவசம் இல்லாமல் செல்வது போன்ற சாகசங்களிலும் இனி ஈடுபட முடியாது.

