பொன்னேரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
பொன்னேரி அருகே உள்ள காவல்பட்டி கிராமம் அருள்மிகு ஸ்ரீ கொம்மாத்தம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காவல்பட்டி கிராமம் அருள்மிகு ஸ்ரீ கொம்மாத்தம்மன் திருக்கோவில் அப்பகுதி மக்களுக்கு மட்டும் அல்லாமல் சாலையில் பயணிக்கும் பொதுமக்களின் பயணத்தை காக்கும் இஷ்ட தெய்வமாக எல்லோரும் வழிபட்டு வருகின்றனர்.
12 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ கொம்மாத்தம்மன் ஆலயம் முகப்பு நுழைவாயில், ஸ்ரீ குபேர விநாயகர் ஆலய விமானம் ஆகிவற்றிற்கு மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ விநாயகர் பூஜை, சங்கல்பம், ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ லஷ்மி ஹோமம், ஸ்ரீ நவக்கிரஹ ஹோமங்களுடன் இரண்டு கால யாக பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹுதி யாத்ராதானம் நடைபெற்று ஸ்ரீ கொம்மாத்தம்மன் ஆலயம் முகப்பு நுழைவாயில், ஸ்ரீ குபேர விநாயகர் விமானங்களுக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டு தீபாராதனை யுடன் தீர்த்தம் பிரசாதம் எனப்படும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

பின்னர் கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த அனைத்து பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
காவல்பட்டி கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
