காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள், சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவுறுத்தலின்படி கீழமை நீதிமன்றங்களில் e-filing- நடைமுறை படுத்துவதுற்குண்டான உரிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் நீதிமன்றங்களில் பயிற்சி பெற்ற ஊழியர்களை நியமித்திடவும் அதுவரை Manual நடைமுறையை கடைபிடித்திட வலியுறுத்தி மாவட்ட நீதிமன்ற நுழைவு வாயில் முன்பாக கூட்டமைப்பின் சேர்மேன் கரூர். நா.மாரப்பன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில்பொது செயலாளர் பா.கார்த்திகேயன், மாநில மகளிர் அணி தலைவி பிரிசில்லா பாண்டியன் மற்றும் பார் கவுன்சில் கவுரவ செயலாளர் மற்றும் நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் அய்யாவு, மண்டல செயலாளர் பாலமுருகன் அவர்களின் முன்னிலையில் மாபெரும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் காஞ்சிபுரம் பார் அசோசியேஷன், காஞ்சிபுரம் லாயர்ஸ் அசோசியேஷன், காஞ்சிபுரம் அட்வகேட்ஸ் அசோசியேஷன். உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


