காஞ்சிபுரம் களக்காட்டூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்
காஞ்சிபுரம் களக்காட்டூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் 4வது வார கார்த்திகை சோமவாரத்தை ஒட்டி 108 சங்காபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் கிராமத்தின் ஏரிக்கரை ஓரம் அமர்ந்து அருள் பாலித்து வரும் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அக்னிஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாதம் நான்காவது சோமவாரத்தை ஒட்டி 108 சங்காபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
இதில் 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாரதனையில் நடைபெற்று சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.
ஆலய நிர்வாகி ராஜேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் வழக்கறிஞர் செல்லப்பா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது


