காஞ்சிபுரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன் (எ) அம்பேத்கர் வளவன் அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவுநாள்
காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட தி.வ.எழிலரசு செயலாளர் தலைமையில் மகளிர் விடுதலை இயக்கம் மாவட்டச் செயலாளர் இந்திரா அம்பேத்கர்வளவன் முன்னிலையில் படம் வைத்து மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மாவட்ட துணைச் செயலாளர் திருமாதாசன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட செயலாளர் மதி ஆதவன், மாவட்ட பொதுச்செயலாளர் செங்கை தமிழன் , முன்னாள் மாவட்டச் செயலாளர் பாசறை செல்வராஜ், தொகுதி துணைச் செயலாளர் ஸ்டான்லி, நகர பொருளாளர் வினோத்குமார், ஒன்றிய செயலாளர் சத்யா, மாமன்ற உறுப்பினர் கௌதமி திருமாதாசன், ஒன்றியக் குழு உறுப்பினர் ரேகாஸ்டான்லி, நிர்வாகிகள் பலர் பங்கேற்று அம்பேத்கர்வளவன் படத்திற்கு மலர்த்தூவி வீரவணக்கம் செலுத்தினர்.


