காஞ்சிபுரம் தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் நல சங்கம் சார்பில் அன்னதானம்

காஞ்சிபுரம் தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் நல சங்கம் சார்பில் அன்னதானம்

தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக ஏகாம்பரநாதர் ஆலய கும்பாபிஷேகத்தை ஒட்டி சுமார் 3000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்று நிறைவு பெற்றது.

இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில் சுமார் 3000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாநில பொதுச் செயலாளர் சரஸ்வதி மற்றும் துணைத் தலைவர் சங்கரி தலைமையில் அன்னதானம் துவங்கியது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கே என் மூர்த்தி கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். இதில் ஓம் சக்தி கந்தன், சத்யா, ஹேமலதா, ஜெயந்தி, சசிகலா, தனம், ஸ்ரீதர், ரவி, மூர்த்தி, சிங்காரவேலன், பாலாஜி, சாந்தி, விஜி, துளசி, கல்யாணி, ராஜி, ரவி, உஷா, ஈஸ்வரி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கினர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *