காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ரூ.45.5 லட்சத்தில் புதிய அலுவலக கட்டிடம் திறப்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ரூ.45.5 லட்சத்தில் புதிய அலுவலக கட்டிடம் திறப்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ரூ.45.5 லட்சத்தில் புதிய அலுவலக கட்டிடம் திறப்பு

முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் ஆலய வளாகத்தில் ரூ.45.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

புதிய அலுவலகக் கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையொட்டி ஏகாம்பரநாதர் ஆலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்பு

நிகழ்ச்சியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமதுரை, ஆய்வாளர் அலமேலு, செயலர் முத்துலட்சுமி, பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஆலய அறங்காவலர் குழுத் தலைவர் வேல்மோகன், அறங்காவலர்கள் வரதன், எஸ்.எல்.என்.எஸ். விஜயகுமார், வசந்தி சுகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஆலய நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்பு

இதனைத் தொடர்ந்து திமுக பகுதி செயலாளர் திலகர், துணைச் செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார், பகுதி நிர்வாகிகள் செந்தில்குமார், எழில்குமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள், ஆலய செயல் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதிய அலுவலகக் கட்டிடம் திறக்கப்பட்டதன் மூலம் ஆலய நிர்வாகப் பணிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

 

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *