காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலய அலுவலக புதிய கட்டிடத் திறப்பு விழா

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலய வளாகத்தில் ரூபாய் 45.5 லட்சம் மதிப்பிலான புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
இதனை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழா வினை துவக்கி வைத்தார்.

இதில் அறநிலையத்துறை ஏசி ராமதுரை, ஆய்வர் அலமேலு, செயலர் முத்துலட்சுமி, பாலசுப்பிரமணியம் குழுக்கள், அறங்காவலர் குழு தலைவர் வேல்மோகன், அறங்காவலர்கள் வரதன், slns. விஜயகுமார், வசந்தி சுகுமார், பகுதி செயலாளர் திலகர், துணைச் செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார், பகுதி நிர்வாகிகள் செந்தில்குமார், எழில் குமார் உள்ளிட்ட பல்வேறு ஆலய செயல் அலுவலர்கள், ஆலய ஊழியர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


