அந்தமான் தீவுப் பகுதியில் மருது பாண்டியர்களின் திருவுருவச் சிலைகள் அமைக்கப்படும் – ஆந்திரா வாரிய தலைவர் சுரேஷ்
ஆந்திரா மாநில சித்தூர் சிங்கம் புல்லட் டி.ஜி.சுரேஷ் அகமுடையார் அவர்கள், சித்தூரில் இருந்து இராமநாதபுரம் நகருக்கு வருகை தந்த பொழுது, ஆந்திரா மாநிலம், சித்தூர் மாநகரில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு வெண்கல திருவுருவச் சிலைகள் நிறுவிய புல்லட் சுரேஷ் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டி வாழ்த்தினர்.

பாரதி நகர் பீமாஸ் ஹோட்டலில் இராமநாதபுரம் மாவட்ட அகமுடையார் முன்னேற்ற சங்கம் சார்பாக பாராட்டு விழா அகவுடையார் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாம்பன் ராஜாஜி தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகள் பி ஆர் பாபு விஜய ராமகிருஷ்ணன் பாஸ்கரன் துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி அகமுடையார் சங்க நிர்வாகிகள், பரமக்குடி அகமுடையார் சங்க நிர்வாகிகள், மானாமதுரை அகமுடையார் சங்க நிர்வாகிகள், இராமநாதபுரம் மாவட்ட, வட்டார, நகர அகமுடையார் முன்னேற்றச் சங்க நிர்வாகிகள், பலர் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.

ஏற்புரை நிகழ்த்தி பேசிய வாரிய தலைவர் புல்லட் சுரேஷ், “இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் தியாகம் போற்றுதலுக்கு உரியது இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று கொடுத்த வீரர்களை கௌரவிக்கும் விதமாக ஆந்திராவில் வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.”
“மேலும் அந்தமான் பகுதியிலும் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் திருவருவசிலையை விரைவில் நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
“அகமுடையார் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அரசியல் கட்சியினர் வேட்பாளராக நிறுத்தினால் முழுமையாக அகமுடைய சமுதாயம் பாடுபட்டு உழைத்து வெற்றி பெறச் செய்வோம்” எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு அகமுடையார் அரண் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், மண்டபம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கே ஜே பிரவீன், பாரதி நகர் அதிமுக பிரமுகர் ராஜேந்திரன், காங்கிரஸ் பிரமுகர் கோபால், மக்கள் நீதி மய்யம் நிர்வாகி பிரைட் மாரிமுத்து, சிலம்பொலி பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

