காஞ்சிபுரம் அக்னீஸ்வரர் ஆலயத்தில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் அக்னீஸ்வரர் ஆலயத்தில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

 

காஞ்சிபுரம் அக்னீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ராவை ஒட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஏரிக்கரை ஓரம் அமர்ந்து அருள் பாலித்து வரும் பழமை வாய்ந்த அருள்மிகு அக்னீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதில் நடராஜருக்கு பழ வகைகள், வாசணை வண்ணத் திரவியங்கள். தேன் பால் தயிர் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வண்ண வாசனை மலர் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது. விழா உபயத்தினை வழக்கறிஞர் செல்லப்பா சிறப்பாக செய்திருந்தார்.

ஆலய நிர்வாகி ராஜேந்திரன் பக்தர்களுடன் இணைந்து விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *