இராமநாதபுரத்தில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் திறப்பு – பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

இராமநாதபுரத்தில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் திறப்பு – பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

இராமநாதபுரத்தில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் திறப்பு: பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார்

இராமநாதபுரத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 2-வது வார்டு பொதுமக்களின் வசதிக்காக முகவை ஊரணி வடக்கு தெருவில், பாலசுப்பிரமணிய சாமி கோவில் அருகே புதிய நியாய விலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டது.

புதிய கட்டிடத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகம்

புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டிடத்தை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி விநியோகப் பணிகளையும் தொடங்கி வைத்தார். புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்களுக்கு நியாய விலைக்கடை சேவைகள் எளிதாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்பு

நிகழ்ச்சிக்கு திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம. கருமாணிக்கம் முன்னிலை வகித்தார். 5-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் ஏற்பாட்டில் விழா நடைபெற்றது.

இதில் இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகர்மன்ற உறுப்பினர் ஜோதிமணி முத்துராமலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதிய நியாய விலைக்கடை கட்டிடம் திறக்கப்பட்டதை அப்பகுதி பொதுமக்கள் வரவேற்றனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *