காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆராதனை விழா

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் 24 மணி தெலுங்கு செட்டியார்கள் சமூகம் சார்பில் 22 ஆம் ஆண்டு காஞ்சி காமாட்சி ஆராதனை விழா. காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் ஆசியுரை.
காஞ்சிபுரம் அன்னை காமாட்சி அம்மனை குலதெய்வமாக கொண்டு வழிபட்டு வரும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தின் சார்பில் 22 ஆம் ஆண்டு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆராதனை விழா நடைபெற்றது.

இவ்விழாவை ஒட்டி காமாட்சி அம்மன் ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது.
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
இதில் சிறப்பாக அழைப்பாளராக காஞ்சிபுரம் சங்கரமடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு ஆசி உரை வழங்கினார்.

மேலும் வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து சுவாமிகள் ஆசியுடன் நடைபெற வேண்டும் என தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா சங்கராச்சார சுவாமிகளிடம் வேண்டுதல் வைத்தார்.
இதில் சங்கத் தலைவர் பி எல் ஏ ஜெகநாதன் பிஸ்ரா தலைமையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
இதில் எம். ஜி. ராமச்சந்திரன், ஆர். எஸ். தமிழ்ச்செல்வன், செந்தில்குமார், கந்தராஜ், எம் .எஸ். மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 24 மணி தெலுங்கு செட்டியார் சமூகத்தினை சேர்ந்த ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு ஆச்சார்யா சுவாமிகள் அனுகிரகம் பெற்று சென்றனர்.

