திமுக கூட்டணிக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை, பாஜகவால் அதிமுகவிற்கு வழக்கமாக வரும் வாக்கு கூட வராது – கார்த்திக் சிதம்பரம் காஞ்சிபுரத்தில் பேட்டி

திமுக கூட்டணிக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை, பாஜகவால் அதிமுகவிற்கு வழக்கமாக வரும் வாக்கு கூட வராது – கார்த்திக் சிதம்பரம் காஞ்சிபுரத்தில் பேட்டி

“திமுக கூட்டணிக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை, பாஜகவால் அதிமுகவிற்கு வழக்கமாக வரும் வாக்கு கூட வராது”

“எதிர்பார்ப்பு காரணமாக கூட்டணி கட்சியில் தேர்தல் நேரத்தில் சலசலப்பு ஏற்படும் பின்பு பேச்சுவார்த்தை பின்பு சரியாக விடும்”

“திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைத்து 10 நாட்கள் ஆகியும் திமுக தலைமையில் கூட்டணி அமைக்காததால் காலதாமதம் ஏற்படுகிறது”

“விஜய் அதிக ரசிகர் கூட்டம் இருக்கும் நடிகர் தான் வாக்கு வங்கி பெருமை தவிர சீட்டு பெறுமா என்பது சந்தேகம் தான்”

“ஜி கே வாசன் கூறியது போல அனைத்து கட்சியிலிருந்து வாக்கை கணிசமாக விஜய் பெறுவார்”

“விஜயின் கூட்டம் வழக்கமான அரசியல் கூட்டமாக இல்லாமல் சினிமா கச்சேரி போன்று நடைபெறுவதால் கட்டுப்பாடுகள் அதிகமாக விதிக்கப்படுகிறது” –

எம்பி கார்த்திக் சிதம்பரம் காஞ்சிபுரத்தில் பேட்டி.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வழக்கத்தீஸ்வரர் கோவிலில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவதிப்படுபவர்கள் இத்திருக்கோவில் வருகை தந்து விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தால் வழக்கில் இருந்து விடுதலை கிடைப்பது ஐதீகம்.

அந்த வகையில் அவ்வப்போது அரசியல் கட்சி பிரமுகர்களும் மற்றும் சினிமா பிரபலங்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் இன்று குடும்பத்தார்கள் வருகை தந்து தனது கோரிக்கையை கடிதம் எழுதி சாமி இடம் பிராத்தனை மேற்கொண்டு விளக்கேற்றி கடிதத்தை உண்டியலில் போட்டு பிரார்த்தனை மேற்கொண்டார்.

கோவிலை சுற்றி வலம் வந்து பிரார்த்தனையில் மேற்கொண்ட எம்பி கார்த்திக் சிதம்பரம் தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜிவி மதியழகன், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாநகர தலைவர் நாதன், மாநில செயற்குழு உறுப்பினர் பத்மநாபன், மாநில வழக்கறிஞர் பிரிவு பொதுச் செயலாளர் குருராஜ், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் கதிரவன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முருகன் சாந்தகுமார், லோகநாதன், யோகி, பிரபு,தென்னெறி சுகுமார், மாநகர பகுதி தலைவர் பட்டு காமராஜ், நந்தகுமார், முத்து கணேசன், பிள்ளையார்பாளையம் கணேசன், வஜ்ரவேல், பூந்தோட்டம் பழனி, ராமர், கந்தசாமி, மூத்த காங்கிரஸ் தலைவர் நூல் கடை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *