தூத்துக்குடி: புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா

தூத்துக்குடி: புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலம் அமைந்தள்ளது.
திருத்தலம் தென்னகத்து புதுவை என அனைத்து மக்களாளும் போற்றப்படும் புண்ணிய பூமியான புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுப் திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா தொடர்ந்து 13 நாட்களாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலை மற்றும் மாலையில் திருப்பலி நடைபெற்றது. கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலம் என்றாலும், அனைத்து சமயத்தினரும் வந்து வழிபடும் தலமாக உள்ளது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை திருத்தலப் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை, மதுரை உயர் மறைமாவட்டம் மேனாள் பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவிழா திருப்பலிக்கு தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமாரி, விருதுநகர், மதுரை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருவிழாவை முன்னிட்டு காலை புனித அந்தோணியார் திருவுருவம் தாங்கிய சப்பர பவனி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் நேர்த்தி கடனாக உப்புயை தூவியும், கும்பிடு சரணம் போட்டு இறைமக்கள் தனது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அப்போது பலர் குழந்தைகளை விற்று வாங்கினார்கள். ஆலய விழாவில் 100-க்கும் மேற்பட்ட பங்கு தந்தைகள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை மோட்சராஜன், உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை சந்தியாகு, ஆன்மீகத் தந்தை சகாயதாசன், பீட்டர் பிச்சைக்கண் மற்றும் அருள்சகோதரிகள், ஆலய இறைமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


