பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி ஒட்டி பால்குட ஊர்வலம்

பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி ஒட்டி பால்குட ஊர்வலம்

காஞ்சிபுரம் தொண்டை மண்டல வேளாளர் சங்கம் திருத்தணி சார்பில் சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி ஒட்டி பால்குட ஊர்வலம்.

காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து தொண்டை மண்டல வேளாளர் சங்கம் திருத்தணி சார்பில் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி ஒட்டி பால்குட அபிஷேக விழா நடைபெற்றது.

இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து காமாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

இதில் சங்கராச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். இவ்விழாவில் சங்கத்தின் மாநில தலைவர் எஸ் பி எல்லப்பன் முதலியார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

இதில் சங்கரா கல்லூரி முதல்வர் முனைவர் கே ஆர் வெங்கடேசன், டாக்டர் சுசித்ரா ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இதில் பூபதி முதலியார், நடராஜ முதலியார், முருகன், குணசேகரன், மனோகரன், பார்த்தசாரதி, கிருஷ்ணமூர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், காஞ்சி காமாட்சி சங்கரமடை, ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், ரவிக்கை உள்ளிட்ட பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *