வெங்காடு ஆரம்பப் பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற ஆண்டு விழா – மாணவர்களுக்கு பரிசுகள்

வெங்காடு ஆரம்பப் பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற ஆண்டு விழா – மாணவர்களுக்கு பரிசுகள்

வெங்காடு ஆரம்பப் பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற ஆண்டு விழா – மாணவர்களுக்கு பரிசுகள்

வெங்காடு ஆரம்பப் பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற ஆண்டு விழா

கலைநிகழ்ச்சிகளில் அசத்திய மாணவர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்பப் பள்ளியில், இன்று (20.03.2026) காலை 11 மணியளவில் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் விழா

விழாவிற்கு வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், துணை ஆசிரியர், வெங்காடு ஏரி நீர் பாசன சங்கத் தலைவர் பி. உலகநாதன், மாவட்ட கழக பிரதிநிதி மற்றும் திருப்பெரும்புதூர் கூட்டுறவு வங்கி தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாணவர்களின் திறமையை வெளிப்படுத்திய நிகழ்ச்சிகள்

ஆண்டு விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்காக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேச்சுப்போட்டி, நடன நிகழ்ச்சி உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பரிசுகளை பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சியடைந்ததுடன், சக மாணவர்களும் அவர்களை உற்சாகப்படுத்தினர்.

மாணவர்களை பாராட்டிய பொதுமக்கள்

விழாவில் வெங்காடு ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆண்டு விழா அமைந்தது.

மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதுடன், அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த ஆண்டு விழா, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *