வெங்காடு ஆரம்பப் பள்ளி ஆண்டு விழா

வெங்காடு ஆரம்பப் பள்ளி ஆண்டு விழா

வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் இன்று (20/3/2026) காலை 11 மணியளவில் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர் துணை ஆசிரியர், வெங்காடு ஏரி நீர் பாசன சங்க தலைவர் பி.உலகநாதன், மாவட்ட கழக பிரதிநிதி மற்றும் திருப்பெரும்புதூர் கூட்டுறவு வங்கி தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விழாவின்போது, கலை நிகழ்ச்சி மற்றும் பேச்சுப்போட்டி, நடன நிகழ்ச்சி அனைத்திலும் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதில் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளை வாழ்த்தினர்.

 

  

 

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *