கும்பகோணம் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்

கும்பகோணம் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர் கே பாரதிமோகன் தலைமையில் நடைபெற்றது.

வரும் 23ஆம் தேதி நடக்க இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில்அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் MKR அசோக்குமார் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை அறிமுகப்படுத்தி கூட்டமும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரின் செயல் வீரர்கள் கூட்டமும் கும்பகோணம் திருமண மண்டபத்தில் தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் கே பாரதிமோகன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தஞ்சை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் கே பாரதிமோகன் பேசுகையில், தமிழகத்தை சீர்குலைக்கும் கஞ்சா போதை பழக்கங்களையும், எடுத்துக் கூறியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிமுகவின் தேர்தல் அறிக்கையை விளக்கி கூறியும், பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்க வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார் .

மேலும் அனைத்து கட்சிகளும் அயராது பாடுபட்டு தாமரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் MKR அசோக் குமாரை வெற்றியடைய செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

 

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *