காஞ்சிபுரத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரத்தில் காமராஜர் நினைவு அறக்கட்டளை சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு காமராஜரின் பிறந்த நாளை ஒட்டி காமராஜர் நினைவு அறக்கட்டளை சார்பில் புதிய ஆடைகள் அணிவித்து பொங்கல் இட்டு மலர்மாலைகள் அணிவித்து விமரிசையாக கொண்டாடப்பட்டது.

காமராஜர் நினைவு அறக்கட்டளை தலைவர் ராமேஸ்வரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளர் வேலுமணி, பொருளாளர் ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

இதேபோல் காமராஜர் நாடார் கூட்டமைப்பு சார்பில் பன்னீர்செல்வம் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் செயலாளர் வேறு மனைவி பொருளாளர் பாலகுமாரன் உள்ளிட்ட பலரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கேக் மற்றும் அன்னதானங்கள் வழங்கி கொண்டாடப்பட்டன.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *