தஞ்சை அருகே 1008 பெண்கள் விளக்கு பூஜை செய்தது ஏன்?

தஞ்சை அருகே 1008 பெண்கள் விளக்கு பூஜை செய்தது ஏன்?

ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் 18 கிராமங்களை சேர்ந்த 1008 பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

தஞ்சை மாவட்டம் காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிப்பாடு நடைப்பெற்றது.

18 கிராமங்களை சேர்ந்த 1008 பெண்கள் திருமண தடை விலக வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும், நோய் நொடி இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என வேண்டி குத்து விளக்கு பூஜை செய்தனர்.

விநாயகர் பூஜையுடன் துவங்க தமிழில் ஓதுவார்கள் மந்திரங்கள் சொல்ல பெண்கள் மனம் உருகி வழிப்பாடு செய்தனர்.

உலக நலன் வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும், இயற்கை சீற்றங்களில இருந்து மக்களை காக்க வேண்டியும் 108 முறை தமிழில் மந்திரங்கள் உச்சரித்து பெண்கள் வேண்டுதல் செய்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *