தூத்துக்குடி: டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்,  டிசிடபுள்யு அணி அபார வெற்றி

தூத்துக்குடி: டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்,  டிசிடபுள்யு அணி அபார வெற்றி

தூத்துக்குடியில் ஆறு நாட்கள் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்,  டிசிடபுள்யு அணி 113 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று முதல்பரிசை தட்டிச் சென்றது.

தூத்துக்குடியில் சீலைன்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் பகடா ஸ்போர்ட்ஸ் இணைந்து  மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மெதோடியஸ் மெமோரியல்  டி T20 கிரிக்கெட் போட்டி கடந்த 11-ம் தேதி தொடங்கியது.

ஆறு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்று டிசிடபுள்யு அணி மற்றும் ஸ்டான்லி பில்டர் கிரிக்கெட் அணி மோதின. இந்த இறுதி ஆட்டத்தில் டிசிடபுள்யு அணியினர் அபார வெற்றி பெற்றனர்.

தூத்துக்குடியில் சீலைன்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் பகடா ஸ்போர்ட்ஸ் இணைந்து நடத்திய  மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மெதோடியஸ் மெமோரியல் டி T20 கிரிக்கெட் போட்டி கடந்த 11-8-2025 அன்று தொடங்கியது.

அன்று தொடங்கி இன்று வரை மொத்தம் ஆறு நாட்கள் நடைபெற்ற இந்த T20 தொடரில், தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 16 அணிகள் பங்கேற்றன.

இந்த கிரிக்கெட் போட்டியினை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஆல்பர்ட் முரளிதரன் ஆகியோர் துணை தலைவர் டாக்டர் மகிழ் ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

இந்த T20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்று டிசிடபுள்யு அணியும், ஸ்டான்லி பில்டர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்டான்லி பில்டர்ஸ் கிரிக்கெட் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தன.

இரண்டாவதாக பேட்டிங் செய்த டிசிடபுள்யு அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவர்களில் 13 ஆவது ஓவரில்  2-விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

சீலைன்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் பகடா ஸ்போர்ட்ஸ் இணைந்து நடத்திய இந்த டிT20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற முதலாவது அணியான டிசிடபுள்யு அணிக்கு 40 ஆயிரம் ரூபாய்  ரொக்க பணம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது.

இரண்டாவது வெற்றிபெற்ற அணியான ஸ்டான்லி பில்டர்ஸ் அணிக்கு 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. மூன்றாவதாக வெற்றி பெற்ற கோவில்பட்டி கேசிசிஎ அணியிணருக்கு 10 ஆயிரம் ரூபாய் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது.  நான்காவதாக வெற்றிபெற்ற சான்சான் கிரிக்கெட் கிளப் அணியினருக்கு 5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு வெற்றி கோப்பை வழங்கப்பட்டது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *