தூத்துக்குடி: 300 மாணவர்கள் சிலம்பம் சுற்றி டிவைன் உலக சாதனை
தூத்துக்குடி: தமிழகத்தின் முன்னோர்களின் வீர கலையான சிலம்பத்தை பறைசாற்றும் வகையில் 300 மாணவர்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி டிவைன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள செயின் தாமஸ் விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து ஆறு வயது முதல் 24 வயது வரையிலான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒரு மணி நேரத்தில் 180 மாணவர்களும் 3 மணி நேரத்தில் 40 மாணவர்களும் ஐந்து மணி நேரத்தில் 30 மாணவர்களும் 8 மணி நேரத்தில் 43 மாணவர்களும் 10 மணி நேரத்தில் 10 மாணவர்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர் அதிகாலை 3 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த மாணவர்களின் சாதனையை டிவைன் உலக சாதனை புத்தகம் சார்பில் அங்கீகரிக்கப்பட்டு சாதனை மாணவர்களுக்கு டிவைன் உலக சாதனை புத்தகம் சார்பில் சான்றிதழ் மற்றும் விருதுகளை அதன் நிறுவனர் கிருத்திகா தேவி வழங்கினார். சாதனைக்கான ஏற்பாடுகளை அப்துல் கலாம் தற்காப்பு பயிற்சி பள்ளி ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.



முன்னதாக இந்த சாதனை நிகழ்ச்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் செயின்ட் தாமஸ் பள்ளி தாளாளர்கள் அமலன் தமியான், ஆஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சாதனை மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையை தாங்கள் ஒரு மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை தொடர்ந்து செய்து டிவைன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது சாதனை படைத்தது தங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்ததாக சாதனை படைத்த மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.

