செங்கம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவில் மூலவருக்கு வெள்ளி உடற்கவசம்

செங்கம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவில் மூலவருக்கு வெள்ளி உடற்கவசம்

செங்கம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவில் மூலவருக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 கிலோ வெள்ளி உடற்கவசத்தை சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி மற்றும் கோவில் உபயதாரர்கள் கோவில் நிர்வாகத்திடம் வழங்கினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை சீற்றத்தின் காரணமாக இடி மின்னல் தாக்கி பெருமாள் கோவில் பெரிய கோபுரம் சேதம் அடைந்தது. சேதமடைந்த கோவில் கோபுரத்தை புனரமைத்து சீரமைக்க வேண்டும் என அதிமுக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் பக்தர்களின் கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை.

இந்த நிலையில் தற்பொழுது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் பழமையான கோவில்கள் புனரமைப்பு செய்யப்பட வேண்டும் என திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று கோயில்கள் முழுவதும் திருப்பணிகள் நடைபெற்றது.

இந்த நிலையில் செங்கம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவில் 7 ஆண்டுகளாக ஆண்டுதோறும் நடைபெறும் கருட சேவை விழா நடைபெறாமல் இருந்தது வரலாற்று சிறப்புமிக்க பழமையான வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவில் புனரமைப்பு செய்து பாலாலயம் செய்ய வேண்டுமென பக்தர்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரிக்கு கோரிக்கை வைத்தனர்.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவு படி மூலம் ரூபாய் இரண்டு கோடி நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்து கோவில் உபயதாரர்கள் மூலமாகவும் நிதி திரட்டி கோவில் புனாரமைப்பு மற்றும் கும்பாபிஷேகம் செய்து முடிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயிலில் உள்ள மூலவருக்கு வெள்ளியாலான உடற்கவசம் செய்வதற்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி 5 கிலோ வெள்ளியும், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பாக 11 கிலோ வெள்ளி மொத்தம் 16 கிலோ வெள்ளி காணிக்கையாக வழங்கப்பட்டு, அதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளியால் ஆன உடற்கவசம் செய்வதற்கு சபதியிடம் வழங்கினர்.

20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 கிலோ வெள்ளியால் மூலவர் பெருமாளுக்கு உடற்கவசம் செய்யப்பட்டு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி மற்றும் உபயதாரர்களிடம் வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட உடற்கவசத்தை சிறப்பு பூஜைகள் செய்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அறங்காவல் குழு தலைவர் திமுக நகர செயலாளர் அன்பழகன், நகர மன்ற தலைவர் சாதிக்பாஷா, ஒன்றிய செயலாளர் மனோகரன், செந்தில்குமார், மற்றும் கோவில் அறங்காவல் குழு நிர்வாகிகள் செந்தில்குமார், ஸ்ரீதர், மற்றும் திமுக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கோவில் உபயதாரர்கள் திருப்பணிக் குழுவினர் செங்கம் நகரப் பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *