காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சங்கராச்சாரியரை சந்தித்து ஆசி பெற்றார் BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன்
- காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சங்கராச்சாரியரை சந்தித்து ஆசி பெற்றார் BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன்
- காமாட்சி அம்மன் ஆலயத்திலும் தரிசனம்; கட்சி நிர்வாகிகள் உடன் பங்கேற்பு
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில், பாரதிய ஜனதா கட்சி தமிழக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சங்கராச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
சங்கர மடத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள் தொடர்ந்து தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் அஸ்வத்தாமன் சங்கராச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றதுடன், மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்திலும் தரிசனம் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் சென்ற அவர், அம்மனை தரிசனம் செய்தார். ஆலய நிர்வாகம் சார்பில் அவருக்கு மலர் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆர். மதன்ராஜ், காஞ்சி மாநகர் மேற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் எஸ்.கே.பி. சதீஷ், மாவட்ட ஆன்மீக பிரிவு தலைவர் காமாட்சி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

