சோழிங்கநல்லூர் அருகே டெக் மகிந்திரா நிறுவனத்தில் பெரும் தீ விபத்து!
- சோழிங்கநல்லூர் அருகே டெக் மகிந்திரா நிறுவனத்தில் பெரும் தீ விபத்து!
- காரப்பாக்கம் வளாகத்தில் ஏற்பட்ட தீயால் பரபரப்பு; IT ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள Tech Mahindra நிறுவன வளாகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கிடங்கு பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதை அடுத்து, நிறுவன ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த IT ஊழியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், தீ விபத்திற்கான உண்மையான காரணம் குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. தீயை முழுமையாக அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
