நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
  • நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ராமநாதபுரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட கமிட்டி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டிற்கு பணி நீட்டிப்பு வழங்கியதையும், நீட் தேர்வை ரத்து செய்யாமல் மாநில அரசுகள் தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்த அனுமதி மறுப்பதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சோபா ரங்கநாதன், துல்கிப்கான், மாவட்ட மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் ஆனந்தி, நகர் தலைவர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் மாநில, மாவட்ட, வட்டார, நகர மற்றும் பேரூர் நிர்வாகிகள், சார்பு அணிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *