தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் சார்பில் இயக்க மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் சார்பில் இயக்க மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் சார்பில் இயக்க மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்

கட்சியை வலுப்படுத்த நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்பு

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இயக்க மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் (SSA-2) தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட வாரியாக இயக்க மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அனைத்து தரப்பினரின் பரிந்துரைகளை பெற நடவடிக்கை

கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்படும் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, காங்கிரஸ் கட்சியை வலுவான மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் அமைப்பு மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலிட பார்வையாளர் பஞ்சாட்சரம் பங்கேற்பு

மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் S.M. சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தூத்துக்குடி மாநகருக்கான மேலிட பார்வையாளராக அறிவிக்கப்பட்ட பஞ்சாட்சரம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளிடம் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் கேட்டு பெறப்பட்டன.

நிர்வாகிகளுக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கல்

ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவாக, கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தேவையான தகவல்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன.

காங்கிரஸ் கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுப்ரமணிய ஆதித்தன், ATS அருள், மண்டல தலைவர்கள் ஐசன்சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், சேகர், மாநில பேச்சாளர் அப்துல் மஜீத், ஊடகப்பிரிவு மண்டல தலைவர் ஜான் சாமுவேல்,துணை அமைப்பு தலைவர்கள் SC துறை பிரபாகரன், அமைப்புசாரா பிரிவு சேவியரம்மாள், மீனவர் காங்கிரஸ் சிமியோன், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி ப்ரீத்தி வினோத், இசக்கியம்மாள், ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், சிறுபான்மை துறை மைதீன்,INTUC பாலகிருஷ்ணன், சுப்ரமணியன், முன்னாள் மாமன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், வர்த்தக அணி அருள்வளன் ஊடகப்பிரிவு முத்து மணி,மாவட்ட துணை தலைவர்கள் டேவிட் வசந்தகுமார், ரஞ்சிதம் ஜெபராஜ், நாகேந்திரன், தனபால்ராஜ், சுரேஷ், பிரபாகர், பொது செயலாளர்கள் கோபால், மைக்கேல் பிரபாகர், புல்டன் , ஆண்ட்ரூஸ், செயலாளர்கள் ஜோனத்தான் , கதிர்வேல், மாரியப்பன், ராஜ்குமார், அசன்பாத், இளைஞர் அணி ரெனிஷ் பாபு, ஆலன், பொன்னரசி, பிராங்க்ளின் வார்டு தலைவர்கள் காமராஜ் ,ராஜரத்தினம், பொன்ராஜ், மகாலிங்கம், கிருஷ்ணன், சித்திரை பால்ராஜ், தனிஷ்லாஸ், கருப்பசாமி ,முருகேசன், முனியசாமி ,மைதீன் பிச்சை, ரதன் ,மாடக்கண், நிர்வாகிகள் அந்தோணிசாமி, சகாய புஷ்பராஜ் ,பர்ட் ராயல், சீனிவாச ஆச்சாரி, சுந்தர்ராஜ், ஜெயபாண்டியன், தனபாலன், பாலசுப்ரமணியன், கணேசன், மில்லை தேவராஜ், சுரேஷ்குமார், அந்தோணி ராஜ், ராபர்ட், எட்வர்ட்ராஜ், துரைப்பாண்டியன், பழனிராஜன், சின்ன ராஜா, எபனேசர், சிதம்பரம், ராஜகோபால் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் சார்பில் இயக்க மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *