தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் – குடும்பத்துடன் ஏராளமானோர் பங்கேற்பு

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் – குடும்பத்துடன் ஏராளமானோர் பங்கேற்பு

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்காக சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம்

குடும்பத்தினருடன் ஏராளமான பத்திரிகையாளர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி பிரஸ் கிளப் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள வாசன் கண் மருத்துவமனை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமான பத்திரிகையாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

பிரஸ் கிளப் நிர்வாகிகள் முன்னிலையில் முகாம்

தூத்துக்குடி பிரஸ் கிளப் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயலாளர் மோகன்ராஜ், துணைத்தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய முகாமை வாசன் கண் மருத்துவமனை மூத்த மருத்துவர் கனிமொழி தொடங்கி வைத்தார்.

கண் பாதுகாப்பு குறித்து மருத்துவர் விளக்கம்

முகாமில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், கண்களில் ஏற்படும் குறைபாடுகளை உரிய முறையில் கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் அவசியம் குறித்தும் மருத்துவர்கள் விளக்கினர்.

மேலும், தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் கண்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் கண்களை பாதுகாப்பாக பராமரிக்கும் வழிமுறைகள் குறித்தும் மருத்துவர் கனிமொழி விளக்கமாக எடுத்துரைத்தார்.

ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்பு

இந்நிகழ்வில் சங்கத்தின் கௌரவ ஆலோசகர்கள் அருண், பாலகிருஷ்ணன், அன்பழகன், செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், மாரி ராஜா, ராஜன், இருதயராஜ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் காதர், அகமது ஜான், கற்பகநாதன், ராமச்சந்திரன், பாலகுமார், நீதிராஜன், அருள்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

தொடர்ந்து சங்க நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர்.

வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்பு

வாசன் கண் மருத்துவமனை சார்பில் மருத்துவர் சுகுமார், தூத்துக்குடி அலுவலக மேலாளர் வைத்தியநாதன், மார்க்கெட்டிங் மேலாளர்கள் ராமராஜன், ரீகன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு முகாமை சிறப்பாக நடத்தினர்.

பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக சிறப்பான முறையில் இலவச கண் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்த வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தூத்துக்குடி பிரஸ் கிளப் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் நன்றி தெரிவித்தார்.

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் – குடும்பத்துடன் ஏராளமானோர் பங்கேற்பு

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *