காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் அமைப்பு மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அமைப்பு இயக்க மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்
மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அமைப்பு இயக்க மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் (SSA-2) காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் அமைப்பை வலுப்படுத்தவும், அனைத்து தரப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துகள், பரிந்துரைகளைப் பெற்று கட்சியை மேலும் வலுவான மக்கள் தொடர்புள்ள இயக்கமாக உருவாக்கவும், தமிழகம் முழுவதும் அமைப்பு மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
டி.டி.கே. சித்திக் முன்னிலையில் ஆலோசனை

இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம், காஞ்சிபுரம் மாவட்ட இயக்க மறுசீரமைப்பு பொறுப்பாளர் டி.டி.கே. சித்திக் முன்னிலையில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.ஏ. அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், மாநகரம், பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கட்சி அமைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதம்

கூட்டத்தில் கட்சியின் அமைப்பு செயல்பாடுகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், நிர்வாகிகளின் பங்களிப்பு, அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் அவர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் கேட்கப்பட்டு, கட்சியின் எதிர்கால அமைப்பு செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாநகரத் தலைவர் நாதன், பொதுக்குழு உறுப்பினர் பத்மநாபன், அரங்கநாத நகர் அன்பு, மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு பொதுச் செயலாளர் கன்னியப்பன், மாநில வழக்கறிஞர் பிரிவு பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குருராஜ், செயலாளர் சீனிவாச ராகவன், நந்தகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட நிர்வாகிகள் தாரன், முத்து கணேசன், சாதிக் பாஷா, பூக்கடை மணிகண்டன், சங்கரலிங்கம், லோகநாதன், பிரபு, இளைஞர் அணி யோகி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நூல் கடை ராதாகிருஷ்ணன், டி.பி. சீனிவாசன், குமார், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் தங்கராஜ், தலைவர்கள் ஆசிரியர் நிக்கோலஸ், பிச்சாண்டி மற்றும் காஞ்சிபுரம் பகுதி தலைவர்கள் சப்தகிரி, காமராஜ், பார்த்தசாரதி, பட்டு காமராஜ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
