நலமாய் வாழ என்றும் கவசமாய்…
அன்பு சகோதர சகோதரிகளே,
இனிய காலை வணக்கம்!
புது முயற்சியாக மக்கள் கவசம் எனும் இந்த வெப்சைட்டை துவக்கி இருக்கும் உங்கள் அன்பு சகோதரருக்கு என்றும், எப்போதும் உங்கள் அன்பு ஆதரவு கிடைக்கட்டும்.
ஆம்..
இன்று முதல் உலகெங்கும் உள்ள மக்களுக்கு நல்வழிகாட்டும் வழிகாட்டியாக, உறுதுணையாக, நம்பிக்கையுடன் நடைபோடும் மக்கள் கவசம் மூலம் உங்களுடன் பயணிக்கிறேன்.
இந்த பயணத்தில் உலகம் முழுவதும் அரங்கேறும் சம்பவங்களை உண்மை மாறாமல் உங்களுக்கு வழங்க உள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அதேபோல் சாலைவசதி, குடிநீர்வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் மக்களுக்கும், இதுபோன்ற வேறு எந்த பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்காமல் அல்லல்படும் மக்களுக்கும் மக்கள் கவசம் ஒரு கருவியாக இயங்கும் என்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
அதோடு மட்டுமல்லாமல் குழந்தைகள், மகளிர் பாதுகாப்பு விவகாரம் உட்பட எந்த விவகாரங்களாக இருந்தாலும், உண்மை மாறாமல் மக்களுக்கு தெரியப்படுத்த புறப்பட்டு வரும் உங்கள் மக்கள் கவசத்திற்கு முழு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒருவர் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க, உடற்பயிற்சி, நல்ல உணவு மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை உடல்நிலைக்கு ஒரு கவசமாக செயல்படும்.
குடும்பம்
ஒருவரின் குடும்பம் அவருக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்போது, அது அவர்களுக்கு ஒரு கவசமாக செயல்படும்
நண்பர்கள்
நல்ல நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும்போது, அதுவும் ஒரு கவசமாக செயல்படும்.
ஆன்மீகம்
ஆன்மீக நம்பிக்கை ஒருவருக்கு மன அமைதியையும், ஆறுதலையும் அளிக்கும்போது, அதுவும் ஒரு கவசமாக செயல்படும்.
பணம்
பணம் ஒருவருக்கு பொருளாதார ரீதியாக பாதுகாப்பை அளிக்கும்போது, அதுவும் ஒரு கவசமாக செயல்படும்.
இந்த கவசம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம், ஆனால் அதன் நோக்கம் ஒருவரை எப்போதும் நலமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பதுதான்.
உண்மை, நம்பிக்கை, பாதுகாப்பு
Truth, Trust, Protection
என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்
K.செந்தில்குமார்

