அதிமுகவின் புது வியூகம்
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நாளை என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும், நாளை 28ஆம் தேதி சனிக்கிழமை தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் மண்டல செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தகவல் தொழில்நுட்ப பிரிவு வாயிலாக மக்களிடையே திமுக-வின் செயல்பாடுகளை விமர்சிப்பதும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இதுவரை நிறைவேற்றாத திட்டங்கள் குறித்தும், மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகள் செய்யும் மக்கள் விரோதப் போக்கு குறித்தும் பரப்புரை மேற்கொள்ளும் வகையில் தேர்தலுக்கான வியூகம் வகுக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

