ஈரான் மீது இஸ்ரேல் தாக்கும் CCTV காட்சி வெளியீடு

ஈரான் மீது இஸ்ரேல் தாக்கும் CCTV காட்சி வெளியீடு

ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய CCTV வீடியோ வெளியாகி, தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.

இஸ்ரேல் – ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே மக்கள் நடமாடும் பகுதியில் ஒரு சாலையில், இஸ்ரேல் குண்டு வீசியது. இந்த, தாக்குதலின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் கட்டடங்கள் தரைமட்டமாவதுடன், சாலையில் உள்ள வாகனங்களும் அந்தரத்தில் பறப்பதுபோன்று காட்சியளிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவை மீது ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தியது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. 12 நாள்களாக நடைபெற்ற இந்தப் போர், கடந்த ஜூன் 24 ஆம் தேதியில் முடிவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *