காஞ்சிபுரம்: எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அவர்களை அரசியல் நாகரிகம் அற்ற முறையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான செல்வபெருந்தகை அவர்களை அரசியல் நாகரிகமற்ற முறையில் பேசிய எடப்பாடி பழனிசாமி கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொறுப்பாளரும் ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவருமான எஸ் ஏ அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் மாவட்ட ஆட்சி எஸ் டி பிரிவு மாவட்ட தலைவர் தங்கராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முருகன் என்கின்ற சாந்தகுமார், மாவட்ட பொறுப்பாளர்கள் நிக்கோலஸ், கௌதம், இளைஞர் அணி அனீஸ், மகளிர் அணி நிர்வாகிகள் சுமித்ரா பாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

