காஞ்சிபுரத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் நல மீட்பு சங்கம் சார்பில் முப்பெரும் விழா

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் கூட்டு அரங்கில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
மண்டல தலைவர் எஸ் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பொருளாளர் சோசைமுத்து துணைச் செயலாளர் செந்தில்வேலன் துணைத் தலைவர் ஜெகதீசன் ஒருங்கிணைப்பாளர் ராமன் செயற்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒருங்கிணைப்பாளர் டி ராஜேந்திரன் திருவண்ணாமலை மண்டல தலைவர் பாஸ்கர் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள்.
இதில் கடந்த 17 12 2024 நடந்த அரை ஆடை போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு விழா, உலக ஓய்வு ஊதிய தினம் தொழிற்சங்க ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் திருவருள் மண்டல செயலாளர் ரவி, ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், காஞ்சி மண்டல கௌரவ தலைவர் பரமசிவம், திருவள்ளூர் மண்டல லஷ்மண ராம், மாநில பொருளாளர் பேச்சியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் சங்கத்தின் தலைவர் கதிரேசன் விழாப் பேருரை ஆற்றினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் துணைத் தலைவர் சம்மந்தன் நன்றிகளை தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆதரவு அளித்த அனைத்து தொழிற்சங்க தலைவர்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நீதித்துறைக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


