காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா
காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 27 ஆம் ஆண்டு தமிழிசை விழா விமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 27 ஆம் ஆண்டு தமிழிசை விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் ரமணி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள் பரதநாட்டிய ஆசிரியர் உஷா ஆண்டறிக்கை வாசித்தார். உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையேற்று விழா வினை துவக்கி வைத்தார்.
இதில் சிறப்பாக சந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் கலை இராம வெங்கடேசன், ஸ்ரீ காஞ்சி சேத்திர கலா மந்திர் இயக்குனர் மீனா வஜ்ரவேல் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து நாதஸ்வர தவில் கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து மதியம் கலைமாமணி திருமுறை கலாநிதி பழனி திரு.சண்முக சுந்தர தேசிகர் குழுவினரின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை ஆசிரியர்கள் ரவிசங்கர் யுவராஜன் சுப்பிரமணி சண்முகானந்தன் லோகநாயகி ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர். தேவார ஆசிரியர் ராஜ்பதி தொகுப்புரை வழங்கினார். கலந்து கொண்ட அனைவருக்கும் தவில் ஆசிரியர் ரகுராமன் நன்றிகளை தெரிவித்தார்.


