தேர்வு எழுதச் சென்ற பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களின் வினோத செயல்

தேர்வு எழுதச் சென்ற பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களின் வினோத செயல்

பள்ளி தாளாரை கட்டி அனைத்தும், காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றும் தேர்வு எழுதச் சென்ற தனியார் பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களின் வினோத செயல்

காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் அப்பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக இறை வணக்கம் செலுத்தினர்.

பின் பள்ளி மாணவிகள் பள்ளியின் தாளாளர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றும், பள்ளி மாணவர்கள் தாளாளரை கட்டி அனைத்தும், காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பின் தேர்வு எழுத தேர்வு அறைக்கு சென்றனர்.

பள்ளி தாளாரோ, “எவ்வித அச்சமும், பயமுமின்றி தேர்வை நல்ல படியாக எழுத வேண்டும்” என மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

பள்ளி மாணவர்களின் இந்த வினோத செயல் பள்ளி தாளாரரின் மீது வைத்துள்ள அன்பையும், தனக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் குருவிற்கு உரிய மரியாதை செய்யும் விதமாக பார்க்கப்படுகிறது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *