காஞ்சிபுரத்தில் ஆவணி அவிட்டத்தை ஒட்டி பூணூல் அணிவிக்கும் விழா
காஞ்சிபுரத்தில் ஆவணி அவிட்டத்தை ஒட்டி பூணூல் அணிவிக்கும் விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் டி கே நம்பி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் ஆலயத்தில் காஞ்சிபுரம் சௌராஷ்ட்ரா சமூக சபா சார்பில் ஆவணி அவிட்ட விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் பூணூல் அணிவித்து விழாவினை சிறப்பித்தனர்.
இதில் சிறப்பு யாகசால பூஜை நடைபெற்ற கலந்து கொண்ட அனைவருக்கும் காஞ்சிபுரம் சௌராஷ்ட்ரா சமூகம் சபா தலைவர் ராமலிங்கம் தலைமையில் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
இதில் செயலாளர் எல்.வி.குமார் ஜவர்கலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பூணூல் அணிவித்து கொண்டனர்.

