காஞ்சிபுரம் ஸ்ரீ படவேட்டம்மன் ஸ்ரீ சுந்தரி அம்மனுக்கு ஆடித்திருவிழா
காஞ்சிபுரம் ஸ்ரீ படவேட்டம்மன் ஸ்ரீ சுந்தரி அம்மனுக்கு 71 வது ஆண்டு ஆடித்திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் சேஷாத்திரி பாளையம் தெருவில் ஸ்ரீ படவேட்டம்மன் ஸ்ரீ சுந்தரி அம்மனுக்கு 71 வது ஆண்டு ஆடி திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் அம்மன் பல்வேறு வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் சிறப்பு தரும் வகையில் பக்தர் கிருபாகரன் இல்லத்தின் முன்பு எழுந்தருளி சிறப்பு தூப தீப ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதில் பம்பை உடுக்கையுடன் சிறப்பு பக்தி பாடல்கள் பாடி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சேஷாத்திரி பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பகுதி வாழ் வாசிகள் பக்தர்கள் என ஏராளமான கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்று சென்றனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் ரவிக்கை வளையல் உள்ளிட்ட மங்களப் பிரசாதங்களும் அண்ண பிரசாதங்களும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிருபாகரன் குடும்பத்தினர் விழா குழுவினர் மற்றும் தெருவாசிகளுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தார்.


