காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரத்திற்கு பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் சிறப்பான வரவேற்பு
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வருகை புரிந்த அதிமுக வேட்பாளர் சோமசுந்தரத்திற்கு வட்டச் செயலாளர் மாணிக்கம் தலைமையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி உடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பாண்டுவ பெருமாள் கோவிலில் தரிசனம் முடித்து பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிள்ளையார்பாளையம் பகுதியில் வருகை புரிந்த வேட்பாளருக்கு வட்டச் செயலாளர் மாணிக்கம் சுப்பிரமணியன் தலைமையில் கட்டைக்கூத்து, புலி நடனம், சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பு வரவேற்பு அளித்தார். மேலும் 21 பெண்கள் கும்பம் மரியாதை உடன் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

இதில் மாவட்ட அவைத் தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் வள்ளிநாயகம், பாசறை செயலாளர் வி ஆர் மணிவண்ணன், பகுதி செயலாளர்கள் கோல்ட் ரவி, கே யு எஸ் சோமசுந்தரம், ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜி, பகுதி செயலாளர்கள் ஜெயராஜ், பாலாஜி, ரவி, பாலாஜி, துரைராஜ், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வேலரசு, ஜோதிலட்சுமி சிவாஜி, பிஜேபி சேர்ந்த ஜீவானந்தம், சரவணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நீலாவதி, மகளிர் அணி நிர்வாகிகள் மது, திலகவதி உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


