காஞ்சிபுரத்தில் சூடு பிடித்த அதிமுகவின் தேர்தல் பரப்புரை

காஞ்சிபுரத்தில் சூடு பிடித்த அதிமுகவின் தேர்தல் பரப்புரை

காஞ்சிபுரத்தில் அதிமுகவின் சூடு பிடித்த தேர்தல் பரப்புரை மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் குறித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்தார்.

இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான சோமசுந்தரம் தலைமையில் மாநகராட்சிக்குட்பட்ட வேதவதி, நதி ரோடு, மலையாள தெரு உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் அதிமுகவின் இலவச சிலிண்டர், பொங்கல் பரிசு தொகை, ஆண்களுக்கான இலவச பேருந்து உள்ளிட்டவர்களை பொதுமக்களிடம் கூறி துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் வள்ளிநாயகம், அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம், பகுதி பொறுப்பாளரும் இளைஞர் அணி செயலாளருமான சிறுவாக்கம் ஆனந்தன், மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் திலக்குமார், சதீஷ், பகுதி செயலாளர் கோல்டு ரவி, வட்டச் நிர்வாகிகள், கோவா. கிருஷ்ணமூர்த்தி, சாய் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *