காஞ்சிபுரம் அன்னை ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா

காஞ்சிபுரம் அன்னை ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா

காஞ்சிபுரம் o p k பள்ளதெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அன்னை ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

பெரிய காஞ்சிபுரம் opk பள்ளத் தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அன்னை ஆகாய கண்ணியம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வழி எங்கும் பக்தர்கள் தீபாரதனைகள் மற்றும் நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து மதியம் ஊரணி பொங்கல் இட்டு இரவு அம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இவ்விழா ஏற்பாடுகளை அன்னை ஆகாய கன்னி அம்மன் விழா குழுவினர் மற்றும் அப்பகுதிவாசியினர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *