காஞ்சிபுரத்தில் வடிவுடையம்மன் ஆலய ஆடி திருவிழா: ஊஞ்சல் சேவையில் எழுந்தருளிய அம்பாள்
காஞ்சிபுரத்தில் வடிவுடையம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி திருவிழாவில் அம்பாள் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

காஞ்சிபுரம் மடம் தெரு சுந்தரி அவன்யூ பகுதியில் அமைந்துள்ள வடிவுடையம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் மூலவர் அம்பாள் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுஉற்சவர் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் தொடர்ந்து சிறப்பு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இவ்விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் பி குமார், கே சூரியகாந்தி ஆகியோர் பக்தர்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

