காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மரியாதை
காஞ்சிபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி அவரது திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் ரயில்வே சார்பில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு அன்னாரது நினைவு நாளை ஒட்டி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாச ராகவன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர் மதியழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் மாநகர தலைவர் நாதன் மாநில செயற்குழு உறுப்பினர் அரங்கநாதர் நகர் அன்பு, மாநில சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் லியாகத் ஷரீப், மாவட்ட துணைத் தலைவர் தாரன், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் குருராஜ், இளைஞர் அணி யோகி, ஓ பி சி அணிபாலமுருகன், மாவட்ட வர்த்தக அணி மாவட்ட தலைவர் பூக்கடை மணிகண்டன், துணைத் தலைவர் சந்திரலிங்கம் நூல் கடை ராதாகிருஷ்ணன், மகேந்திரன் லைன் குப்புசாமி, லோகநாதன், தென்னேரி சுகுமார், கொள்ளளூர் சண்முகம், தயாளன், திருவேங்கடம், முத்து கணேசன், ராமர், பவுல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



